Arulmighu Shree Muthumariamman Thirukovil, Coventry

சைவ சமய நற்பணி மன்றம் ( HINDU COMMUNITY SOCIETY )

கொவென்றி முத்துமாரியம்மன் திருக்கோவில் வழிபாடு முறைகள்

  • கோவிலுக்குள் வரும்பொழுது கை, கால்களை கழுவிவிட்டு உள்ளே வரவும்.
  • அங்க பிரதட்சணம் செய்பவர்கள் திருவிழா அன்று தான் உருள வேண்டும் என்பது இல்லை. ஆலயத்தில் அறிவித்து காலை 8.00 மணி .முதல் 9.00 மணி வரை செய்யலாம்.
  • மாவிளக்கு எடுக்கும் பொழுது கோவிலில் வெறும் தரையில் படுத்து தான் எடுக்க வேண்டும்.
  • கோவிலுக்குள் தேங்காய்சிரட்டை, வாழைப்பழத்தோல் மற்றும் குப்பைகூளங்கள் போடக்கூடாது.
  • கோவில் சுவற்றில் குங்குமத்தாலோ, எண்ணெய்யாலோ, சூலாயுதம், நாமம் வரையக்கூடாது.
  • அம்மனை தரிசிக்க வருபவர்கள் தங்களால் முடிந்த அளவு பூ, எலுமிச்சம் பழம், மாலை, நெய், எண்ணெய் கொண்டு வரலாம்.
  • உப்பு, மிளகு போடுபவர்கள் அதற்கு உண்டான தொட்டியில் தான் போடவேண்டும்.
  • விபூதியை பூசி விட்டு மீதியை உண்டியலில் போட வேண்டாம்.
  • ஆண்கள், பெண்கள் அவரவருக்கு உண்டான வரிசையில் தான் செல்ல வேண்டும்.
  • தீர்த்தம், மஞ்சள், குங்குமம் எடுத்தவர்கள் உடனே அடுத்தவர்களுக்கு எடுக்க வழி விட வேண்டும்.
  • வீட்டிற்கு தீர்த்தம் எடுப்பவர்கள் ஐயா வசம் விபூதி போட்டுக் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.
  • கோவிலுக்குள் எந்த இடத்திலும் சூடம் கொளுத்தக்கூடாது.
  • காணிக்கைகளை உண்டியலில் போடவும்.
  • விரத நாள் பூர்த்தியான பின்பு தான் சட்டி எடுக்கவேண்டும்.
  • கோயிலுக்கு வரும் பெண்கள்புடவை அணிந்து வர வேண்டும் மற்றும் ஆண்கள் மேல்சட்டையை கழற்றி விட்டு தான் உள்ளே வரவேண்டும். சிறார்கள் பாவாடை சட்டை அல்லது,சுடிதார் அல்லது தாவணி அணிந்து தான் வரவேண்டும். (சரம் / லுங்கி , Shorts மற்றும் Short Skirts அனுமதி இல்லை).
  • கோயிலுக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் அலுவலகத்தில் தொடர்புகொள்ளவும்.
  • அர்ச்சனை செய்பவர்கள் உண்டியியல் காணிக்கை செலுத்தி அர்ச்சனைசெய்து கொள்ளலாம்.
  • விளக்கு பூஜை, நூல் கட்டுதல் மற்றும் விசேட தினங்களுக்கான பூஜைகளுக்குரிய பணத்தினை அலுவலகத்தில் செலுத்தி பற்றுசீட்டினை பெற்றுக்கொள்ளவும்.
  • நேர்த்திகடங்களான மொட்டை அடித்தல், காதுகுத்தல், அங்க பிரதட்சணம் செய்பவர்கள், மாவிளக்கு எடுப்பவர்கள் அலுவலகத்தில் முன்கூட்டியே அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • நேர்த்திகடங்களுக்கான உருவ வகையறா, கண்மலர், உருவபொம்மை போன்றவற்றை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Reach Us

    134 Station Street West, Foleshill, Coventry
    CV6 5ND
  • Chithirai
  • Aadi
  • Aavani
  • Aipasi
  • Karthikai
  • Markazhi
  • Thai
  • Maasi
  • Panguni
  • Sashti
  • Kiruthigai
  • Prathosam

Stay Connect With Us


Social Media

Newsletter Subscription






`